இது கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய 16 பக்கம் கொண்ட கதைப் புத்தகம். வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, ஏற்கெனவே 5 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில், குறைந்த விலையில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகி உள்ளது.
இது பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட புத்தகம். வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்து கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம் இது.
டைனோசர் பொம்மையைப் பார்த்து, நிலா ஏன் பயந்தாள்? நிலாவுக்கு வீட்டில் இருக்க ஏன் பிடிக்கவில்லை? டைனோசர் மேல் நிலா ஏறி, எப்படிப் பறந்தாள் என்று தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
வகை:- | சிறார் கதைகள் |
ஆசிரியர் – | ச.முத்துக்குமாரி |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 8778073949. |
விலை:- | ரூ 20/- |