தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.
“நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் உயிர்”; “கிளி..குருவி..காக்கா..மயில்.. எல்லாம் வேறே வேறே தான். ஆனா..எல்லாமே பறவைகள் தானே?” “மதங்கள் வேறு வேறு ஆனாலும் நாம மனுசங்க தானே?” என்ற கேள்விகள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக வேற்றுமையில் ஒற்றுமை காண வலியுறுத்தும் புத்தகம்.
வழ வழ தாளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவும், அழகான வண்ணப் படங்கள் நிறைந்தும் உள்ள இப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்கானது.
வகை | வண்ணப்படப் புத்தகம் |
ஆசிரியர் | ச.தமிழ்ச்செல்வன் |
வெளியீடு:- | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06 |
விலை | ரூ 75/- |