பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.
16 பக்கம் கொண்ட இந்நூலில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் ஒரு கதை உள்ளது. விலங்குகளுக்குச் சொந்தமான காட்டை மனிதன் அபகரித்துக் கொண்டதன் விளைவாக உணவும் நீரும் தேடி ஊருக்குள் வரும் அரிசிக் கொம்பன் என்ற பெரிய யானைக்கும் மாதி என்ற சிறுமிக்கும் இடையேயான நட்பைப் பேசும் கதை.
மாதியிடம் யானை என்ன சொன்னது? ஊருக்குள் வந்த யானையைப் பிடிக்க வந்த அதிரடிப்படையின் தலைமை அதிகாரியிடம் மாதி என்ன கேட்டாள்? அதிரடிப்படை யானையைப் பிடித்ததா? என்று தெரிந்து கொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.
வகை | சிறார் வாசிப்பு நூல் |
ஆசிரியர் | குருங்குளம் முத்து ராஜா |
வெளியீடு:- | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/-. |