கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம்

Kodukkum_maram

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.

கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம்’ என்பது முதல் கதை. ஒரு காட்டில் இரண்டு மரங்கள் இருக்கின்றன. கொடுக்கும் மரத்திடம் கேட்டால் தானியம், பழம் என உணவு கொடுக்கும். இன்னொன்று அடிக்கும் மரம். அதனிடம் கொடு என்று கேட்டால் அடிக்கும். அதைத் தெரிந்து கொண்ட ஆமை உணவு தேடிக் காட்டுக்கு வந்த அரசனுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே அடிக்கும் மரத்தைக் காட்டி அடி வாங்க வைப்பது முதல் கதை. காத்து இருக்க வேண்டியதன் அவசியத்தைக் ‘கடல் காகம்’ என்ற இரண்டாவது லைபீரிய நாட்டுக்கதை புரிய வைக்கிறது.  

அடி வாங்கிய அரசனும், அவன் கூட வந்தவர்களும் என்ன முடிவு எடுத்தார்கள்? கடல் காகம் கோழியிடமும் மயிலிடமும் என்ன கேட்டது? கடைசியில் அதன் கேள்விக்குப் பதில் கிடைத்ததா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள இந்தக் கதைப்புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

வகை – மொழிபெயர்ப்புசிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்லைலா தேவி
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-.
Share this: