தலையங்கம் – மார்ச்-2026

Womensday_pic

வணக்கம். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!

12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க இனிய வாழ்த்துகள்!

மார்ச் எட்டாம் தேதி அனைத்துலக மகளிர் தினம் உலகமுழுதிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!  இந்த மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை அனைவரும் குறிப்பாகப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் கொண்டாட்ட நாளல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கச் சட்டங்களை வலுப்படுத்தவேண்டும்; குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்; வேலைவாய்ப்பிலும் சம்பளத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க வேண்டும்;  பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியும், சுகாதாரமும் கிடைக்க வேண்டும் போன்று இன்னும் எட்ட வேண்டிய குறிக்கோள்களுக்காகப் பெண்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நாளிது..

ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் 1910இல் சர்வ தேச மகளிர் தினத்தை முதன்முதலில் அறிவித்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. ஆண்களுக்கு இணையாகக் கல்வி கற்கத் தடை இருந்தது. பெண்கள் போராடி போராடித் தான் இந்த உரிமைகளைப் பெற்றனர். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி அனைத்துலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மார்ச் ஒன்றாம் தேதி ஈரானில் ஒரு தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 165 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது மனதை ரணமாக்கிய செய்தி. ஒவ்வொரு போரிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தாம். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் அநியாயமான போரை மற்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து உடனே நிறுத்தவேண்டும். அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *