பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.
16 பக்கம் கொண்ட இந்நூலில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் இரண்டு கதைகள் உள்ளன. தியா எங்கே? என்ற முதல் கதையில் மூன்று மீன்கள் கயலின் தோழிகளாக இருக்கின்றன. ஒரு நாள் குளத்தில் மீன் பிடிக்கிறார்கள். மீன் வலையில் மாட்டி விடாமல் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி கயல் தன் தோழிகளை எச்சரிக்கிறாள். ஆனால் மீன் பிடித்து முடிந்த பிறகு தியா மீனைக் காணோம். தியா எங்கே போனது? என்பதைக் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
டாமி என்பது இரண்டாவது கதை. கதிர் ஒரு நாள் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு பள்ளி செல்கிறான். பள்ளிக்கு உள்ளே கொண்டுவரக்கூடாது எனக் காவலாளி மறுப்பதால் கதிர் கேட்டுக்கு வெளியே டாமியை விடுகிறான். டாமி என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
வகை | சிறார் வாசிப்பு நூல் |
ஆசிரியர் | ஞா.குமுதம் |
வெளியீடு:- | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/-. |