நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
தன் பிறந்த நாளில், புது ஆடை உடுத்த முடியவில்லை என்று கவலைப்படுகிறது கேக். அதன் நண்பன் சுண்டு என்கிற எலி. “நீ இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் இல்லை; குழந்தைகள் பிறந்த நாளில் உனக்குத் தான் முக்கிய இடம்” என்று சொல்லி எலி கேக்கின் கவலையைப் போக்குகிறது. மேலும் கேக் பிறந்த கதையையும், அதன் வரலாற்றையும் சுண்டு விவரிக்கிறது.
நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தையும், துரித உணவுகளை உண்பதால் உடலுக்கு ஏற்படும் தீய விளைவுகளையும் சுண்டு எலி மூலமாக, ஆசிரியர் இதனை வாசிக்கும் குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கிறார்.
துரித உணவு கலாச்சாரத்தின் தீங்கு குறித்துச் சிந்திக்க வைக்கும் கதை.6-12 வயது குழந்தைகளுக்கான புத்தகம்.
வகை | சிறார் குறுநாவல் |
ஆசிரியர் | கார்த்திகா கவின்குமார் |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. 044-24332924 |
விலை | ரூ 35/- |
மகிழ்ச்சி
நன்றி 🙏
மிக்க நன்றி கார்த்திகா.