இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள். அம்முயற்சியில், அவர்கள் சந்தித்த விசித்திரமான பிரச்சினைகள் என்னென்ன? இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடித்தார்களா? என்பதை, நாவல் விறுவிறுப்புடன் விவரிக்கின்றது.
இடையில் இளம் தலைமுறைக்குத் தெரிய வேண்டிய நேதாஜி உருவாக்கிய, இந்திய தேசிய ராணுவம் குறித்த வரலாற்றுச் செய்திகளும், இந்தக் காலச் சிறுவர்களுக்குத் தெரியாத, சர்க்கஸ் குறித்த சுவையான செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா) |
வெளியீடு | தேசாந்திரி பதிப்பகம், சென்னை. (+91-44-23644947) |
விலை | ரூ 70/- |