கதைகளைக் கூடி வாசிப்பதுடன், அதை விளையாட்டாகவும் மாற்றிச் சிறுவர்களை விளையாட வைப்பதை, உலகெங்கிலும், புதிய பாணியாக இப்போது செயல்படுத்துகிறார்களாம். அந்த வகையில், தமிழில் இந்தக் கதா விளையாட்டு, புது முயற்சி.
கோடக தேசத்தை ஆண்ட மன்னன் பெயர், தயவான். பாரசீகத்திலிருந்து வந்த மாயாஜாலம் செய்யக்கூடிய அல்நசீர் என்பவர், தம்மால் சிரிப்பை வாசனையோடு மணக்கவும், ஒளிரவும் செய்ய முடியும் என்கிறார். அதே போல், இளவரசிக்குச் செய்தும் காட்டுகிறார்.
சிரிப்பை வெறுக்கும் காட்டிலிருந்த உக்ரா என்ற அரக்கன், இளவரசியைத் தூக்கிக் கொண்டு போய்க் காட்டில், சிறை வைத்து விடுகின்றான். இப்போது காட்டுக்குப் போய், இளவரசியை மீட்டாக வேண்டும். எப்படி மீட்பது?
கதையை வாசிக்கும் நாம், தாயக்கட்டையை உருட்டி, அதில் வரும் எண்ணுக்குப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ, அதன் படி காட்டுக்குள் முன்னேற வேண்டும். நமக்கு வந்த எண்ணின்படி, நாம் ஆபத்தில் சிக்கித் தோற்றுவிட்டால், மீண்டும் முதலிலிருந்து, துவங்க வேண்டும்.. முன்னும், பின்னுமாகப் பயணித்து, யார் முதலில் சவாலை வெல்கிறார்களோ, அவரே அபாய வீரன்!
விளையாட்டு மூலம், வாசிப்பைச் சுவாரசியமாக்கும், சிறந்த முயற்சி.
வகை | கதை விளையாட்டு |
ஆசிரியர் | எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) |
வெளியீடு | தேசாந்திரி பதிப்பகம், சென்னை. (+91-44-23644947) |
விலை | ரூ 60/- |