தலையங்கம் – ஜனவரி 2026

15/05/2021 அன்று துவங்கிய ‘சுட்டி உலகம்’ வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. Views ஒரு லட்சத்தை நோக்கி முன்னேறுகிறது.

‘சுட்டி உலகம்’ வெளியிட்ட சில காணொளிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையைப் பெற்றுள்ளன.  150க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல் அறிமுகம் இந்தத் தளத்தில் உள்ளது. தங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற ரசனைக்கேற்ற நூல்களைத் தேர்வு செய்ய எங்கள் நூல் அறிமுகம் உதவும்.  

சென்னை நந்தனம் YMCA உடல்கல்வியியல் கல்லூரியில் 49வது புத்தகத்திருவிழா 08/01/2026 அன்று துவங்கி 19/01/2026 வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விழாவைத் துவக்கி வைத்தார்.

இது ஆசியாவின் மிகப் பெரிய அறிவுத் திருவிழா!  இந்த முறை நுழைவுக்கட்டணம் இல்லை. வாசகர்கள் இலவசமாகவே சென்று வரலாம். இவ்விழாவுக்காக  1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு முறையாவது குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்குச் சென்று வாருங்கள். என்னென்ன தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன என கு[ழந்தைகள் தெரிந்து கொள்ளட்டும்.

உங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்கள் விரும்பும் புத்தகங்களையும் வாங்கிக் கொடுங்கள். இந்தப் புத்தாண்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைப்பதைப் புத்தாண்டு சபதமாக மேற்கொள்ளுங்கள். புத்தகம் வாங்குவது செலவல்ல; அது அறிவுக்கான முதலீடு.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *