பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.
இதில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் இரண்டு கதைகள் இருக்கின்றன. நத்தையின் ஆசை என்ற முதல் கதையில் ஒரு நத்தையும் ஆமையும் மலை மேல் ஏறி உச்சிக்குப் போக ஆசைப்படுகின்றன. மெதுவாக ஊர்ந்து ஏறிப் பாதி தூரம் செல்கின்றன. பின்னர் வரையாடு ஒன்றிடம் உதவி கேட்கின்றன. அந்த வரையாடு அவற்றுக்கு உதவியதா? இரண்டும் மலை மேல் ஏறி உச்சிக்குச் சென்றனவா? என்பது மீதிக்கதை.
இரண்டாவது கதை விண்வெளிப்பயணம். அருண் என்பவன் விண்வெளி வீரனாகி விண்வெளிக்கு ஆய்வு செய்யப் போக வேண்டுமெனக் கனவு காண்கிறான். அதற்காக உழைக்கிறான். அவன் கனவு நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
வகை_ | சிறார் வாசிப்பு நூல் |
ஆசிரியர் | ராஜிலா ரிஜ்வான் |
வெளியீடு:- | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/-. |