தலையங்கம்_ஆகஸ்ட்_2025

Inde_pic

அனைவருக்கும் வணக்கம்.

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 15/08/1947 அன்று தன் முதல் சுதந்திர நாளைக் கொண்டாடியது. அதன்படி இந்தாண்டு தன் 79ஆம் சுதந்திர நாளை இந்தியா கொண்டாட இருக்கின்றது. எல்லோருக்கும் இனிய அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துகள்!

இம்மாதம் ஆகஸ்ட் 1 முதல் ஈரோடு புத்தகத் திருவிழா 230 ஸ்டால்களுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 12 வரை இது நடக்கும். தற்போது மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வாய்ப்புள்ள பெற்றோர் அவசியம் உங்கள் பிள்ளைகளோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள். அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொடுங்கள். கூடவே அவர்கள் வயதுக்கேற்ற சில புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்து  வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தைச் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யுங்கள். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளின் ஆளுமைத் திறன் வளரப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம். குழந்தைகளின் பிறந்த நாளுக்குப் புத்தகம் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைத் துவங்குங்கள்.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருமுறை பதவி வகித்தவர்; பெண்ணுரிமைப் போராளி என்ற பல்துறை சார்ந்து இச்சமூக நலனுக்காக இயங்கிக் கொண்டிருந்தார். இன்றைய நினைவேந்தலில் அவருடன் செயல்பட்டவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து வசந்திதேவி அவர்கள் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது.

தாம் இறந்த பிறகும் தம் உடல் மருத்துவ மாணவர் ஆய்வுக்குப் பயன்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உடலைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குத் தானமாக அளித்துவிட்டார். இப்படிப்பட்ட ஆளுமை வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. முனைவர் வசந்தி தேவி அம்மாவின் நினைவைப் போற்றுவோம். இளந்தலைமுறை இவரது வாழ்க்கை வரலாறை அவசியம் வாசிக்க வேண்டும்.

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.   

Share this: