நட்சத்திரக் குழந்தை

Natchathira-Kuzhanthai

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை புகழ்மதி வீட்டுச் சன்னலில் இரவில் எட்டிப் பார்த்த உருவம் யாருடையது? அவள் பயம் நீங்கியதா? நிலா மேகத்தில் ஒளிந்து கொள்ளக் காரணம் என்ன? நட்சத்திரத்தின் அம்மா யார்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 

வகை – சிறார் வாசிப்பு நூல்குறுங்கதைகள்
ஆசிரியர்தேனி சுந்தர்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-
Share this: