தினைக்குருவி (Munia)சிட்டுக்குருவியை விடச் சின்னது; தேன்சிட்டை விடப் பெரியது. இதன் இன்னொரு பெயர் சில்லை.
தலை,கழுத்து,உடலின் மேல்பகுதி ஆகியவை, கரும்பழுப்பு நிறம்; கீழ்ப்பக்கம் கறுப்பு, வெள்ளை செதில்களுடன் புள்ளிகள் காணப்படும். இதனைப் புள்ளிச் சில்லை (Scaly-breasted Munia) அல்லது புள்ளி தினைக்குருவி என்பார்கள்.
இதன் முக்கிய உணவான தானியங்களைத் தின்பதற்கு ஏற்றவாறு, இதன் அலகு கூம்பு வடிவத்தில், மொத்தமாக இருக்கும். நெல்வயல், புல்வெளி ஆகிய இடங்களில் கூட்டமாகக் காணப்படும். மின்சாரக் கம்பிகளில் வரிசையாக அமரும்.
அடர்ந்த புதர்ச் செடி, முள் மரங்களில் கூடு கட்டும். புல், வைக்கோல் கொண்டு, பந்து போல் கூடு கட்டும். மார்ச் முதல் செப்டம்பர் வரை, இதன் இனப்பெருக்கக் காலம். 4 முதல் 10 முட்டைகள் வரை இடும்.
PC_Thanks_Wikipedia.