இக்கதையின் நாயகி வனிதாவுக்கு வண்ணங்கள் தாம் நண்பர்கள். கருப்பைப் பார்த்தால் இருட்டின் பயம் வந்துவிடும் என்பதால், அதை மட்டும் நண்பனாக, அவள் சேர்த்துக் கொள்ளவில்லை.
திடீரென்று ஒரு நாள் பூமியிலிருந்த கருப்பைத் தவிர, மற்ற வண்ணங்கள் அனைத்தும் மாயமாக மறைந்துவிடுகின்றன. வண்ணங்களின் உலகம் வண்ணுலகம் என்றும், அங்குத் தான் பூமிக்குத் தேவையான வண்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் கருப்பு மூலம் அறிந்து கொள்கிறாள் வனிதா.
வண்ணங்கள் சிறைபட்டிருக்கும் அந்த மாயாஜால உலகான வானவன் கோட்டைக்குக் கருப்பு அவளை அழைத்துப் போகின்றது. அங்கு அவள் ஒரு எலியின் உதவியுடன் அந்தக் கோட்டைக்குள் செல்கின்றாள்.
சிறைப்பட்டிருந்த வண்ணங்களை வனிதா விடுவித்தாளா? அதற்கு அவளுக்கு வைக்கப்பட்ட போட்டிகள் என்னென்ன? அவற்றை அவள் எவ்வாறு எதிர்கொண்டாள்? என்பது மீதிக்கதை.
வானம் ஏன் நீலநிறத்தில் இருக்கிறது? வானவில்லின் வண்ணங்கள் யாவை என்பன போன்று, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் செய்திகளையும், ஆங்காங்கே பெட்டிச் செய்தியாகக் கொடுத்துள்ளமை சிறப்பு!
கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய வனிதாவின் சுவாரசியமான சாகசப்பயணம் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள, இந்நாவலை வாங்கிச் சிறுவர்களுக்குப் பரிசளியுங்கள்.
வகை | சிறுவர் நாவல் |
ஆசிரியர் | பஞ்சு மிட்டாய் பிரபு |
வெளியீடு | வானம் பதிப்பகம்,சென்னை-89 +91 91765 49991 |
விலை | ₹ 40/- |