சூரியனைத் தேடி..

Suriyanai_pic

இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.

கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!” என மாற்றிக் கொள்கிறது. முடிவில் மொழி தான் நம் அடையாளம் என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறது.  

‘சிம்பன்ஸி சொன்ன தீர்ப்பு’ என்ற கதையில், சேவல், குயில்,மயில்,காகம் ஆகிய நான்கும் ஒன்றையொன்று உருவ கேலி செய்து கொண்டு சண்டை போடுகின்றன. முடிவில் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று சிம்பன்ஸி சொன்ன தீர்ப்பைக் கேட்டுச் சமாதானமடைகின்றன. ‘நாராவும் சாராவும்’ என்ற கதை, சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்துப் பேசுகிறது.

‘முயலும் ஆமையும்’ என்ற கதை, இக்காலத்துக்குத் தேவையான சமூக நீதி பற்றிக் குழந்தைகளுக்கு எளிய மொழியில் விளக்குகிறது. ‘சூரியனைத் தேடி’ என்பது அதீத புனைவும், அறிவியலும் கலந்த கதை.

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-ஊருணி வாசகர் வட்டம், நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல் 89393 87296/9962104614
விலைரூ 80/-.

Share this: