நத்துவும் மித்துவும்

Nathu_mithu_pic

நத்து என்கிற நத்தை, நண்பர்கள் யாருமின்றித் தவித்திருக்கும் நேரத்தில் மித்து என்ற கம்பளிப்புழுவின் நட்பு அதற்குக் கிடைக்கின்றது. நத்து தன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற சுவைகளை மித்துவுக்கு அறிமுகம் செய்கின்றது. இரண்டும் சேர்ந்து தோட்டத்து இலைகளைத் தின்று, ஜாலியாகப் பொழுதைப் போக்குகின்றன.

மேலும் நத்து மூலம் செடிகளின் மருத்துவ குணங்களையும் மித்து தெரிந்து கொள்கின்றது. கம்பளிப்புழு கூட்டுப்புழுவாக மாறி வண்ணத்துப்பூச்சியாக மாற வேண்டிய சமயத்தில், இரண்டும் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

நண்பனின் பிரிவுக்குப் பிறகு, நத்துவுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன? வண்ணத்துப்பூச்சியாக மாறிய பிறகு, இரண்டுக்கும் நட்பு தொடர்ந்ததா? என்பதைச் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் விவரிக்கும் சிறுவர் நாவல்.

தோட்டத்துப் பூச்சிகள் பற்றியும், பல்வேறு தாவரங்கள் பற்றியும் ,நம் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றியும், குழந்தைகள் இக்கதை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற நாவல். குழந்தைகளைக் கவரும் விதத்தில் வண்ணப்படங்கள் நிறைந்து, வாசிப்பைச் சுவாரசியமாக்கும் மின்னூல்.  

வகை – மின்னூல்சிறுவர் நாவல் – மின்னூல்
ஆசிரியர்கீதா மதிவாணன்
வெளியீடுஅமேசான் கிண்டில் இணைப்பு:- https://www.amazon.in/dp/B0BG176K38
விலைரூ 49/-
Share this: