கீதா மதிவாணன்

Geetha_photo

திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருமணத்துக்குப் பிறகு சென்னையில் வசித்த இவர் தற்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக கீதமஞ்சரி (http://geethamanjari.blogspot.com/) என்ற வலைப்பூவில் சிறுகதை, தொடர்கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகள், சிறுவர் பாடல், ஒளிப்படம், தோட்ட அனுபவம் எனப் பலவற்றையும் பகிர்ந்து வருகிறார். பெங்களூர் புஸ்தகா டிஜிட்டல் மீடியாவிலும், பிரதிலிபியிலும் இவரது மின்னூல்கள் வெளியாகியுள்ளன. புகைப்படம் எடுத்தலும், வீட்டுத்தோட்டமும் இவரது பொழுதுபோக்குகள்.

இவர் தமிழாக்கம் செய்த ஹென்றி லாசன் சிறுகதைகளின் தொகுப்பு ‘என்றாவது ஒரு நாள்’ என்ற பெயரிலும், இவரது சிறுகதைத் தொகுப்பு ‘என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’ என்ற பெயரிலும் வெளியாகியுள்ளன. பறவை ஆர்வலரான இவர், அமேசான் கிண்டிலில் ‘ஆஸ்திரேலியாவின் அதிசயப் பறவைகள்’ என்ற தலைப்பில் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார். தற்போது சுட்டி உலகம் https://chuttiulagam.com  வலைத்தளத்தில், ஆசிரியர் குழுவில் உள்ளார்.  சுட்டி உலகத்துக்கான காணொளிகளைத் தயாரித்து வெளியிடுகின்றார்.

‘கொக்கரக்கோ‘ எனும் தலைப்பில், சிறுவர் பாடல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னிக்கோவில் இராஜா அவர்களது லாலிபாப் சிறுவர் உலகம் இதை வெளியிட்டுள்ளது.

Share this: