ஆஸ்திரேலியா பிற கண்டங்களிலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து தனித் தீவாக இருப்பதால், உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அதிசய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளின் சிறப்பு அம்சம், இவை மார்சுபியல் வகையைச் சேர்ந்தவை என்பது தான்.
மார்சுபியல் என்றால், லத்தீனில் ‘பை’ என்று அர்த்தம். முழுமையான வளர்ச்சியுறாக் குட்டிகளைத் தாய் வயிற்றில் இருக்கும் ஒரு பையில் வைத்து வளர்ப்பது, இந்த வகையில் அடங்கும்.
இந்த முதல் தொகுப்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் அதிசய உயிரினமான மேக்ரோபோடிடே ((Macropodidae) குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளைக் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்கெல்லாம் தெரிந்த கங்காரு, இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது தான்.
ஆனால் இக்குடும்பத்தில் கங்காரு, வல்லரூ, வல்லபி, பெடிமெலான், மரக்கங்காரு என 65 வகைகள் உள்ளன என்பது வியப்புத் தரும் செய்தி. இவற்றின் தோற்றம், உணவு, வசிப்பிடம், இனப்பெருக்கம், இவற்றுக்குப் பழங்குடியினரின் வைத்த பெயர் ஆகியவை குறித்த சுவாரசியமான விபரங்களை, இந்நூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்காங்கே ஒளிப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆஸ்திரேலியா விலங்குகள் குறித்துத் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நூல் என்ற பெருமையை, இந்நூல் பெறுகிறது.
குழந்தைகளுக்கு இயற்கையின் மீதும், உயிரினங்கள் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தும் மின்னூல். நமக்குப் பரிச்சயம் இல்லாத விநோத உயிரினங்கள் என்பதால், பெரியவர்களுக்கும் வாசிக்க சுவாரசியமாக இருக்கும்.
வகை – மின்னூல் | கட்டுரை மின்னூல் |
ஆசிரியர் | கீதா மதிவாணன் |
வெளியீடு இணைப்பு:- | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B0B19NXLLN |
விலை | ரூ 69/- |