ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர். இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர், பிரிட்டானிய வம்சாவளியில் பிறந்தவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். 17 வயதில் இவர் எழுதிய ‘The Room on the Roof’ என்ற முதல் நாவலுக்கு பிரிட்டனின் பெருமைமிகு ‘John Llewellyn Rys’ நினைவுப் பரிசு கிடைத்தது. 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கட்டுரைகள், 40 க்கும் மேற்பட்ட சிறார் படைப்புகள் என எழுதியிருக்கிறார்.